» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு!
வியாழன் 6, மார்ச் 2025 8:34:42 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3.60லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில், மாவட்ட பதிவாளர் மற்றும் ஏரல் சார்-பதிவாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு பத்திரப்பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர்பால்துரை தலைமையிலான போலீசார் மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், ஏரல் சார்பதிவாளர் செல்வக்குமார் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், ஏரல் சார்பதிவாளர் செல்வக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)











IndianMar 6, 2025 - 10:32:49 AM | Posted IP 162.1*****