» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் பகுதியில் ரூ.104 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் : கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
புதன் 5, மார்ச் 2025 9:00:28 PM (IST)

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.104 இலட்சம் மதிப்பீட்டில் 03 முடிவுற்ற திட்டப்பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 03 இடங்களில் சமூகப் பொறுப்பு நிதி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.104 இலட்சம் மதிப்பீட்டில் 03 முடிவுற்ற திட்டப்பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், அவர்களின் தலைமையில் இன்று(05.03.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வெளிநோயாளி கட்டிடத்தினையும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூரில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினையும், வடமலைசமுத்திரத்தில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினையும் என மொத்தம் 3 இடங்களில் ரூ.104 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 03 திட்டப்பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 கர்ப்பிணிதாய்மார்களுக்கு தாய் சேய் நல பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களையும் தூத்துக்குடி பாரளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், அருணா சந்திரசேகர், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










