» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பூமி பூஜை : இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்பு
புதன் 5, மார்ச் 2025 8:27:50 PM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே வளி மண்டலத்தை ஆய்வு செய்ய ரோகினி-6 எச்.200 என்ற சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் முதன்முறையாக கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்காக பூமி பூஜை இன்று நடை பெற்றது. பூஜையில் இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் மற்றும் அதிகாரிகள், வல்லுனர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் குலசேகரன் பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிறிய வகை ராக்கெட்டுகள் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










