» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்!
புதன் 5, மார்ச் 2025 8:12:03 PM (IST)

தூத்துக்குடியில் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
1993 ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு மாத கோடை விடுமுறை முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது அவர்களுக்கு பணிக் கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், மாவட்டச் செயலாளர் சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயராணி, மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி, ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சிஐடியூ மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து உட்பட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










