» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தொழிலதிபர் உட்பட 3பேர் கத்தி முனையில் கடத்தல்: எஸ்பியிடம் புகார்!
புதன் 5, மார்ச் 2025 5:28:31 PM (IST)

தூத்துக்குடியில் டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக தொழிலதிபர் உள்ளிட்ட 3பேரை 8பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்தியதாக எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனியார் நிறுவனங்களில் பசுமை தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கனகராஜ் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள வின் பாஸ்ட் என்ற தனியார் கார் தொழிற்சாலையில் தோட்டம் அமைக்க ஒப்பந்தம் எடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக சில நபர்கள் கனகராஜை தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கனகராஜ் கடந்த மூன்றாம் தேதி தூத்துக்குடி முள்ளகாட்டை காட்டைச் சேர்ந்த தனது தொழில் பார்ட்னர் ஆன ஸ்டாலின் மற்றும் உதவியாளர் சரவணன் ஆகியோருடன் வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு சென்று விட்டு வெளியே திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது காரை 3 இருசக்கர வாகனத்தில் வந்த 8பேர் கொண்ட கும்பல் மடக்கி அதில் கத்தி முனையில் 3 பேர் காரில் இருந்த கனகராஜ் மற்றும் ஸ்டாலின் சரவணன் ஆகியோரை ஆகியோரை தாக்கியதுடன் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது
கார் புதூர் பாண்டியபுரம் அருகே செல்லும்போது அங்கே கடத்திச் செல்லப்பட்ட ஸ்டாலினின் சகோதரர் அருள்ராஜ் உள்ளிட்ட 4பேர் காரில் கடத்திச் சென்ற நபர்களை தங்களது காரில் பின் தொடர்ந்து காரை நடுவழியில் நிறுத்தி உள்ளனர். இது தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் கனகராஜ் உள்ளிட்ட 3பேரை கடத்திய 8பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடி உள்ளது.
இந்நிலையில் இந்த மோதலில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் புதியம்புத்தூர் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக முள்ளக்காட்டை சேர்ந்த கடத்தப்பட்ட ஸ்டாலினின் சகோதரரான அருள்ராஜ், மாரி செல்வம், திருமணி ஆனந்த், கார்த்திக் ஆகிய நான்கு பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்டாலின் ஆகியோர் காவல் துறையினர் தவறுதலாக தங்களை கடத்தல் கும்பலிடம் இருந்து காப்பாற்றிய 4பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தங்களை கடத்திய கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். தூத்துக்குடியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










