» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

புதன் 5, மார்ச் 2025 4:56:38 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
  • மன்னார்குடி - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
  • நெல்லை - சென்னை எழும்பூர் இடையேயான நெல்லை எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் செங்கல்பட்டில் நிறுத்தம்.
  • தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையேயான முத்துநகர் எக்ஸ்பிரஸ் மார்ச் 8ல் மாம்பலத்தில் நிறுத்தம்.
  • மண்டபம் - சென்னை எழும்பூர் இடையேயான விரைவு ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
  • புதுச்சேரி - சென்னை எழும்பூர் இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 8ல் தாம்பரத்தில் நிறுத்தம்.
  • சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 06, 07ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
  • சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
  • சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ல் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
  • சென்னை எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் மார்ச் 6, 7ல் 15 நிமிடம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory