» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாதன்குளம் பள்ளிவாசலில் காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரம்
புதன் 5, மார்ச் 2025 3:53:06 PM (IST)

தாதன்குளம் முஹைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசலில் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கருங்குளம் அருகேயுள்ள தாதன்குளம் முஹைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசலில் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பள்ளிவாசல் இமாம் முஹம்மது மீரான் துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் அலியார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பல்நோக்கு மருத்துவமனை பலியாளர் ஆறுமுகம், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.
காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக சுகாதாரத் துறையின் சார்பாக காசநோய் ஒழிப்பு பிரச்சாரம் 07.12.2024 முதல் 100 நாட்கள் நடைபெற்று வருகிறது. காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறிப்பாக பொதுமக்களிடையே ஆரம்ப காலத்திலேயே, பாதிப்பை கண்டறிந்து உடனடி சிகிச்சை மேற்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










