» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் தவக்காலம் துவக்கம் : கிறிஸ்தவர்களுக்கு பனை ஓலை உண்டியல் வழங்கல்!

புதன் 5, மார்ச் 2025 12:35:37 PM (IST)



நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 
 
தவக்காலமாகிய லெந்து நாட்களில் கிறிஸ்தவர்கள் தங்களை வெறுத்து மாமிசம் சாப்பிடாமல், வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து அதில் வரும் பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்து, அதனை புனித வெள்ளி அன்று ஆலயங்களில் படைப்பார்கள். முன் காலங்களில் ஆலயங்களில் மண் கலயங்கள் கொடுக்கப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் வரவினால் மண் கலயங்கள் மாறி பிளாஸ்டிக் உண்டிலாக மாறினது. 

பிளாஸ்டிக் பூமிக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவதால் மறுபடியுமாக பிளாஸ்டிக்கிற்கு மாறாக பனை ஓலையினால் செய்யப்பட்ட உண்டியல்கள் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனை துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டது. தவக்காலத்தின் ஆரம்ப நாளான இன்று திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சாம்பற் புதன் ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் சேகர தலைவர் ஜான் சாமுவேல் செய்தி வழங்கினார். ஆராதனையை தொடர்ந்து பனை ஓலை உண்டியல் வழங்கப்பட்டது. சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் உண்டியல்களை வழங்கினார். 

முதல் உண்டியலை ஓய்வு பெற்ற குருவானவர் பொன்னுசாமி பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆலய பணியாளர் ஆபிரகாம், கமிட்டி உறுப்பினர்கள், பாடகர் குழுவினர் மற்றும் சபையார் பங்கு பெற்றனர். பனை ஓலை உண்டியல் இயற்கைக்கு பாதுகாப்பானதாகவும் பனையை நம்பி தொழில் செய்யும் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாகவும் காணப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசலைத்துறையின் இணை இயக்குனரும், திருவறையூர் சேகர தலைவர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory