» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்துநகர் எக்ஸ்பிரஸ் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தம்: பயணிகள் கடும் அவதி!
புதன் 5, மார்ச் 2025 10:52:21 AM (IST)
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.40 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. இதுபோல் சென்னையில் இருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு வருகிறது. இதில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். இதில் முதியோர்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.
முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடிக்கு வரும் போது இரண்டாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் ரயிலை விட்டு இறங்கி முதல் பிளாட்பாரத்திற்கு சுமார் 100 படிகள் ஏறி இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றன. எனவே, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை வழக்கம் போல் முதல் பிளாட்பாரத்தில் நிறுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)











அதுக்குMar 5, 2025 - 02:41:16 PM | Posted IP 172.7*****