» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் தகராறில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய அண்ணன், தம்பி கைது!
புதன் 5, மார்ச் 2025 10:42:12 AM (IST)
தூத்துக்குடியில் கடனை திருப்பி கொடுக்காதால் ஏற்பட்ட தகராறில் தம்பதி உட்பட 3பேரை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர், மேற்கு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் மகன் ரெனிஸ்டன் (18), இவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரி பிரசாத் (25) என்பவரிடம் ரூ.33ஆயிரம் கடன் வாங்கி இருந்தாராம். கடனை திருப்பிக் கொடுக்காதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஹரி பிரசாத், அவரது அண்ணன் அரிராம் (27), மற்றும் அவரது நண்பர் துரைசாமி உள்பட6 பேர் கொண்ட கும்பல் ரெனிஸ்டனிடம் தகராறு செய்து அவரை பீர் பாட்டலால் சரமாரியாக தாக்கினார்களாம். இதை தடுக்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி அனுசியா ஆகிய இருவரையும் அவர்கள் தாக்கினார்களாம்.
இதில் காயம் அடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஹரிராம், ஹரி பிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










