» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆலந்தலை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
புதன் 5, மார்ச் 2025 10:18:45 AM (IST)

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. இதன் ஒரு பகுதியான தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தவக்காலத்தில் தொடக்க நாளான இன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் காலை 6.00 மணிக்கு சிறப்பு திருப்பலி திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாட்களை கடைப்பிடிப்பதை குறித்து திரளாக திரண்டு வந்த கிறிஸ்தவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தார்.
பின்னர் திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி திருத்தல நிதி குழுவினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)










