» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் ஏப்.4 வரை ரத்து : தெற்கு ரயில்வே தகவல்!
புதன் 5, மார்ச் 2025 8:44:49 AM (IST)
தூத்துக்குடி-வாஞ்சிமணியாச்சி பயணிகள் ரயில் நாளை (மார்ச் 6) வியாழக்கிழமை முதல் அடுத்தமாதம் 4-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலைய பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ரயில்வே தண்டவாளத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 9.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56724) நாளை (வியாழக்கிழமை) முதல் 4.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56725) நாளை முதல் 4.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 3 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56726) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு காலை 8.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (56723) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது" என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










