» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கடற்கரையில் தேசிய ஆராய்ச்சி குழு ஆய்வு!

புதன் 5, மார்ச் 2025 8:43:14 AM (IST)

திருச்செந்தூர் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை தேசிய கடலோர ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பு பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன் கடல் சீற்றம் காரணமாக அதிக அளவில் கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 20 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியும், 7 அடி ஆழத்திற்கு பள்ளமும் ஏற்பட்டது.

மேலும் சில பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியும், பாறைகள் தெரிந்த வண்ணமும் இருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அந்த பகுதியில் பள்ளங்களில் ஓரளவு மணல் நிரம்பி காணப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் குழுவினர் கோவில் முன் உள்ள கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடற்கரையோரம் நடந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து 2-வது கட்டமாக டிரோன் மூலம் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இறுதிக்கட்டமாக நேற்று மாலை திருச்செந்தூர் கோவில் கடற்கரை மற்றும் ஜீவாநகர் பகுதியில் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி பொறியாளர் ஜெயசுதாவிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ரமணமூர்த்தி கூறுகையில், ‘இந்த ஆய்வு குறித்த அறிக்கை வருகிற 7-ந் தேதி தமிழக தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை அரசு அறிவிக்கும்’ என்றார். ஆய்வின் போது கோவில் உதவி ஆணையர் நாகவேல், செயற்பொறியாளர் ஆறுமுகம், விஞ்ஞானி ராமநாதன் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory