» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் மாசித்திருவிழா 2-ம் நாள்: சிங்கக் கேடய சப்பரத்தில் சுவாமி வீதி உலா

புதன் 5, மார்ச் 2025 8:33:58 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 2-ம் நாளில் சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் வீதி உலா வந்தனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

பின்னர் பகலில் சுவாமி குமரவடங்கப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் அம்பாள் மட்டும் உள் மாடவீதி, வெளி ரதவீதிகளில் உலா வந்து மீண்டும் மண்டபம் வந்து சேர்ந்து.

பின்னர் அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து சிவன் கோவில் சேர்ந்தார்கள்.

இன்று (புதன்கிழமை) இரவு சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory