» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம் : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
புதன் 5, மார்ச் 2025 8:01:21 AM (IST)

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலம் சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு இன்று தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து. தூத்துக்குடி லூதம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ நிறைவேற்றினார். கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. இதே போல் தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் 13ஆம் தேதி குருதோலை ஞாயிறு அதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது.
அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் புனித வெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும். ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் தேவ ஆலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










