» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கறி விருந்து அன்னதானம்!
புதன் 5, மார்ச் 2025 7:46:39 AM (IST)

முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வேதகோட்டைவிளையில் பொதுமக்களுக்கு கறி விருந்து அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் வேத கோட்டைவிளையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை யொட்டி தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு சிறப்பு கறிவிருந்து அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலசிங் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஸ்கர், கிளை செயலாளர்கள் ஞானதாஸ், ஞானியார் குடியிருப்பு ரமேஷ், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் மானாடு பாலமுருகன், திமுக இளைஞரணி எப்ராஹிம்சீலன், ஒன்றிய பிரதிநிதி கனகராஜ், ஸ்டீபன், ஸ்ரீதர் உள்பட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










