» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது கார் மோதி வாலிபர் பலி: நண்பர் காயம்!
செவ்வாய் 4, மார்ச் 2025 9:14:45 PM (IST)
சாத்தான்குளம் அருகே பைக் மீது கார் மோதியதில் காயம் அடைந்த இளைஞர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சடையன்கிணறு கிராமத்தை சேர்ந்த வர் சித்திரைவேல் மகன் செல்வின் (25). அறுவடை இயந்திர ஓட்டுனரான இவர் நான்கு பேர் உடன் சேர்ந்து சீட்டுன பேரி பகுதியில் அறுவடை இயந்திரம் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று செல்வினின் பாட்டி ஆவுடையம்மாள் காலமானதை ஒட்டி இறுதிச் சடங்கு சாத்தான்குளத்தில் நடந்தது.
அதில் பங்கேற்று விட்டு செல்வின் அவரது நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த சந்துரு (25) என்பருடன் இரவு சடையன் கிணறு திரும்பினர். அப்போது சாத்தான்குளம் அருகே வள்ளியம்மாள்புரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்தஅடையாளம் தெரியாத கார் ஒன்று இவர்களின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் செல்வின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்துரு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










