» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சைபர் ஹாக்கத்தான் போட்டியில் ரூ.1½ லட்சம் பரிசு : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

செவ்வாய் 4, மார்ச் 2025 8:48:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1½ லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித்த திறமைகளை காட்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் சைபர் ஹாக்கத்தான் (Cyber Hackathon) போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கு பெறுபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், ஒன்றிலிருந்து மூன்று குழுக்களாகவும், (Team size 1- 3) சுயதொழில் செய்பவர்களாகவும் (freelancers), தொழில்நுட்ப நிறுவனங்கள் (Tech Firms) மற்றும் தரவு விஞ்ஞானிகளாகவோ (Data Scientist and Coders, Programmers) இருக்கலாம். மேலும் இப்போட்டி 6 தலைப்புகளில் நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கு https://linktr.ee/hackathon2025 என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள QR code மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 09.03.2025 ஆகும். முதல் கட்ட வெற்றியாளர்கள் குறித்து 11.03.2025 அன்று அறிவிக்கப்படும். முதல் கட்ட வெற்றியாளர்கள் தங்களது முன்மாதிரி படைப்புகளை 28.03.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

இறுதிப்போட்டி 04.04.2025 அன்று நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1½ லட்சம் பரிசாக வழங்கப்படும். மேலும் இப்போட்டி குறித்த தகவல்கள் பெறுவதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையோ அல்லது 9498207845 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory