» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் புதிய திட்டப் பணிகள் : கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்!

செவ்வாய் 4, மார்ச் 2025 5:08:29 PM (IST)



தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டத்தின்கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.44 இலட்சம் செலவில் முடிவுற்ற 02 திட்டப் பணிகளை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 03 இடங்களில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ்; ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.44 இலட்சம் செலவில் முடிவுற்ற 02 திட்டப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் இன்று (04.03.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்றையதினம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடுக்காம்பாறை ஊராட்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய நலக்கூடக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். 

அதனைத்தொடர்ந்து, கீழபாண்டவர்மங்கலம் ஊராட்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் செலவில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையக் கட்டடத்தினையும், நாலாட்டின்புத்தூர் ஊராட்சியில் ரூ.9 இலட்சம் செலவில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர், புதிதாக திறக்கப்பட்ட நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் , கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி , கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Dr.Y.J.A.Kalai SelvanMar 4, 2025 - 05:30:20 PM | Posted IP 104.2*****

Amazing to See

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory