» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழக முதல்வர் ஆட்சி நடத்துகிறார் : கனிமொழி எம்பி பேச்சு!

செவ்வாய் 4, மார்ச் 2025 3:51:38 PM (IST)



திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரிமான ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சி நடத்தி வருகிறார் என கோவில்பட்டியில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கனிமொழி எம்பி பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இன்று (04.03.2025) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.20.55 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா (இ-பட்டா)க்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 06 பயனாளிகளுக்கு தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் கட்டியதற்கான சாவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45,81,000 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,90,770 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 137 பயனாளிகளுக்கு ரூ.86,86,770 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசும் போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு எல்லோருக்கும் எல்லாம் என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஏழை எளிய பொதுமக்கள், விவசாயப் பெருமக்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில் முனைவோர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைய தலைமுறையினர்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை உருவாக்கி, அதனைத்தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே சில நாட்களுக்கு முன்னால் நீண்ட நாள் அவர்களின் கோரிக்கையாக இருந்தது அரசியல் அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு வேண்டும், அப்பொழுதுதான் எங்களுடைய உரிமைகளை ஆணித்தனமாக எடுத்து சொல்ல முடியும் என்ற அந்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கென்று தனியாக ஒரு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற ஒரு முன்னுதாரணமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். 

திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரிமான ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகள், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கக்கூடிய வகையிலே நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து, அவர்களின் வழியிலே நிற்கக்கூடியவர்களாக, அவர்களை பின்பற்றக்கூடியவர்களாக, நம்முடைய மக்களை பாதுகாக்கக்கூடியவர்களாக நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
அமைச்சர் பி.கீதாஜீவன் பேசும் போது தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பயன்பெறும் வகையில் கூடுதல் ஒதுக்கீடு பெறப்பட்டு, தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டிலிருந்து ஒரு கால் செயல்படாத நிiலியில் இருந்தாலும் அந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்ற உத்தரவைத்தொடர்ந்து அதனுடைய எண்ணிக்கை இரண்டு மடங்குகளாக உயர்த்தப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதுபோன்று, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளது. வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சொந்த வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். பின்பு, பட்டா பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் நமது கோவில்பட்டி வட்டத்தில் உள்ள அனேக மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டு, கலைஞர் கனவு இல்லமும் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டாக்கள் இன்னும் கணினியில் ஏற்றப்படாத நிலையில், அதனை கணினியில் ஏற்றி கணினி பட்டாக்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதைத்தொடர்ந்து, தற்போது கணினி பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டும்மல்லாமல், 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதில் வருவாய்த் துறையைச் சார்ந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory