» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்: துணை முதல்வர் திறந்து வைத்தார்!
செவ்வாய் 4, மார்ச் 2025 3:33:49 PM (IST)

திருவைகுண்டம் பேட்மாநகரில் கட்டப்பட்டுள்ள "முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) இன்று நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பேட்மாநகரில் கட்டப்பட்டுள்ள "முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை" காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் முதலமைச்சர் கிராம புறத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளிலே வளர வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் சட்டமன்றத்திலே ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
அதன்படி, இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் துணை முதலமைச்சர் அவர்களால் இந்த மினி ஸ்டேடியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்திலே மாணவர்கள் விளையாடும் வகையில் கால் பந்து, கைப்பந்து, உடற்பயிற்சி கூடம், ஓட்ட பயிற்சி என அனைத்து வசதிகளையும் செய்யப்பட்டுள்ளது.
இதில் அத்தனை பயிற்சியையும் மாணவ - மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இந்த மினி ஸ்டேடியம் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஸ்டேடியம் இங்கு அமைக்கப்பட்டதன் வாயிலாக அருகில் உள்ள அனைத்து கிராமத்தில் உள்ள மாணவ - மாணவியர்களும் இதன் மூலம் விளையாட்டிலே கலந்து கொண்டு நல்ல முறையில் வெற்றி பெறுவார்கள். மாணவ - மாணவியர்கள் காலை, மாலை என இரு வேளையிலும் விளையாண்டு தங்களின் உடல்நிலையை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள இந்த மினி ஸ்டேடியம் உதவும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இந்த மினி ஸ்டேடியம் ஆனது தூத்துக்குடி மாவட்டத்திலே முதல் முதலாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி.செ.அமிர்தராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் பொதுமக்கள் மாணவ – மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










