» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.09 கோடி வருவாய்
செவ்வாய் 4, மார்ச் 2025 12:59:09 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.09 கோடி ரொக்கம், மற்றும் 1390கிராம் தங்கம், 23,500 வெள்ளி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் தக்கார் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில் நாயகி ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி, மோகன், கருப்பன், சுப்பிரமணியன், மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூபாய் 3 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 758 ரூபாய் காணிக்கைகளாக கிடைத்தன. மேலும் 1390 கிராம் தங்கம், 23 500 கிராம் வெள்ளி, 63,500 கிராம் பித்தளை,8700கிராம்செம்பு, 6 200 கிராம் தகரம் மற்றும் 752 அயல் நாட்டு நோட்டுகள் கிடைத்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










