» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிறுத்தத்தில் ஊர் பெயர் பலகை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு: போலீசார் குவிப்பு!

செவ்வாய் 4, மார்ச் 2025 8:47:10 AM (IST)



சாத்தான்குளம் அருகே பேருந்து நிறுத்தத்தில் ஊர் பெயர் பலகையை மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட போலையர்புரம், கொழுந்து கிராமக்களிடையே பேருந்து நிழற்குடைக்கு ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த இரு கிராம மக்களும் ஊர் பெயர் பலகையில் தங்களது ஊர் பெயரை வைக்ககோரி தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 

இந்த நிலையில் போலையர் புரம் காமராஜர் பேருந்து நிழற்குடை பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கொழுந்தட்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே கொழுந்தட்டு கிராம மக்கள் சார்பில் வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் வருவாய்த்துறை முடிவின் படி பெயர் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்ட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், பிரச்னைக்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சாஸ்தாவிநல்லூர் என ஊராட்சி பெயரை வைக்குமாறு ஆட்சியர் உத்தரவி¤ட்டதாக தெரிகிறது. 

இதற்கு வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் போலையர்புரம் காமராஜர் பேருந்து நிறுத்தம் என பெயர் பலகையை அகற்றி விட்டு சாஸ்தாவிநல்லூர் பேருந்து நிறுத்தம் என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு போலையர்புரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இசக்கிமுருகேஸ்வரி தலைமையில் பேச்சு வார்ததை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

அதில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் போலையர்புரம் மக்கள் சார்பில் டேவிட் வேதராஜ், ஜார்ஜ் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் பேருந்து நிறுத்த பெயர் தொடர்பாக 21 நாள்களுக்குள் விளக்கம் தருவதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு அதிகாரிகள் மறுத்து மாவட்ட ஆட்சியர், உத்தரவின பேரில் போலையர்புரம் பெயர் பலகையை அகற்றிவிட்டு சாஸ்தாவிநல்லூர் பெயர் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்து பெயர் பலகையை வைக்க அதிகாரிகள் மாலை வந்தனர். அதற்கு போலையர்புரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த பேருந்து நிறுத்தம் முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் தலைமையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நாககுமாரி, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா உள்ளிட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதனையடுத்து போலையர்புரம் கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனைக்குள்ள இடத்தை பார்வையிட்டு பெயர் பலகை மாற்றுவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் எனவும், அதுவரை சாஸ்தாவிநல்லூர் என பெயர் பலகை வைக்க விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பெயர் பலகையை மாற்றி வைக்கும் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர். இதனையடுத்து கூடி நின்ற போலையர்புரம் கிராம மக்களை கலைந்து செல்ல போலீசார் பணித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory