» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் : 5பேர் கைது
செவ்வாய் 4, மார்ச் 2025 8:32:26 AM (IST)
தூத்துக்குடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் 5பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் காமராஜர் நகரை சேர்ந்தவர் வசந்த் (21). இவர், 17 வயது சிறுமியை காதலித்து வந்தாா். கடந்த 2023-ம் ஆண்டு வசந்த், அந்த சிறுமியை தனது உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும், இதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தனர். இதற்கிடையே வசந்த் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் வீட்டுக்கு தனித்தனியாக சென்ற வசந்தின் நண்பர்களான பொன் முத்துக்குமார் (22), மதன்குமார் (21) ஆகியோர் வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், அதனை தங்களின் நண்பர்களுக்கு அனுப்பி இருப்பதாகவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும் கூறி மிரட்டினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், வசந்த், அவரது நண்பர்கள் பொன்முத்துக்குமார், மதன்குமார், சக்திகுமார் (29), பொன்மாடசாமி(28) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 17 வயது சிறுவனை தவிர மற்ற 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










