» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் மாசி திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் : தக்கார் ஆய்வு
செவ்வாய் 4, மார்ச் 2025 8:17:28 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி திருவிழாவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து தக்கார் இரா. அருள்முருகன் ஆய்வு செய்தார்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு மாசித் திருவிழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் தினமும் பல்வேறு வாகனங்களில் முருக பெருமான் வீதி உலா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
11-ம் திருநாளான 13-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி ,கழிப்பிடம், அன்னதானம் உள்ளிட்ட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவில் தக்கார் இரா.அருள் முருகன் ஆய்வு செய்தார்.
மாசித் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது . முதல் நாளன்று காவடி எடுத்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பாதயாத்திரை வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக தைப்பூசத்தை போன்று பக்தர்களின் சிரமமின்றி தரிசனம் செய்ய கையில் டேக் அணிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரா.அருள்முருகன் தெரிவித்தார்.
ஆய்வின் போது இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் இரா. அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் ஞானசேகரன், நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், உதவியாளர் வேல் ராமகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










