» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை : ரூ.3.63 லட்சம் பறிமுதல்

திங்கள் 3, மார்ச் 2025 8:25:25 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் பல்வேறு பத்திரப்பதிவுகளுக்கு பத்திரப்பதிவு அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கீழூர் பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனை செய்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில் இன்று மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக பணம் கைமாற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பாலுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து டிஎஸ்பி பீட்டர் பில் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூபாய் 3,63,000 இருப்பதைக் கண்டு அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 

மேலும் இந்த பணத்தை வைத்திருந்தது தொடர்பாக மாவட்ட பதிவாளர் தணிக்கை சதாசிவம் மற்றும் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக உதவி பத்திரப்பதிவு அலுவலர் செல்வகுமார் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

குமார்Jun 22, 1741 - 03:30:00 AM | Posted IP 104.2*****

புதுக்கோட்டை பத்திரபதிவுஅதிக அளவு கூட்டம் டோக்கன் முறை இல்லை அது நடக்குமா

ஆதிMar 3, 2025 - 11:36:48 PM | Posted IP 162.1*****

அரசு அவருக்கு போதுமான அளவு சம்பளம் கொடுத்தால் அவர் ஏன் லஞ்சம் வாங்கப்போறார் அவருக்கு துப்புரவு பணியாளர் பணிந்து பதவிஉயர்வு வழங்கவேண்டும்

சாமான்யன்Mar 3, 2025 - 11:15:17 PM | Posted IP 172.7*****

இதுல என்னடா பரபரப்பு? இதே ஜோலி தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory