» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வழக்கமான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
திங்கள் 3, மார்ச் 2025 5:19:06 PM (IST)

தூத்துக்குடியில் கனமழை பெய்தபோதும், வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிததார்.
இது குறித்து மேயர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்கனவே மழை நீர் தேங்கிய பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கவில்லை. கோயில்பிள்ளை நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
அப்பொழுது அந்தப் பகுதியின் அருகே செல்லும் துறைமுகச் சாலையானது உயர்ந்து உள்ளதால் இந்தப் பகுதியானது மிகவும் பள்ளமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் மாற்று வழி மூலமாக புதிய வடிகால்கள் அமைத்து தரப்படும் என்றார். ஆய்வின் போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவரும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க பொது செயலாளருமான தெர்மல் ராஜா, மாமன்ற உறுப்பினர் முத்துவேல் உட்பட பலர் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)











என்னதுMar 3, 2025 - 07:00:20 PM | Posted IP 162.1*****