» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனையில் சுதா கருத்தரிப்பு மையம் துவக்க விழா!
திங்கள் 3, மார்ச் 2025 4:48:18 PM (IST)

தூத்துக்குடி அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சுதா கருத்தரிப்பு மையம் துவக்க விழாவை முன்னிட்டு, குழந்தையில்லா தம்பதியருக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இயங்கிவரும் சுதா கருத்தரிப்பு மையம் தூத்துக்குடி தேவர்புரம் ரோடு நீதிபதி குடியிருப்புகளுக்கு எதிர்புறம் அமைந்துள்ள அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் முன்னாள் பிஷப் எஸ்.இ. தேவசகாயம் ஜெபம் செய்து திறந்து வைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதியருக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து காெண்டனர். மேலும் சுதா கருத்தரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில் "சுதா கருத்தரிப்பு மையமானது கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
குழந்தையின்மை சிகிச்சையானது எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு செயல்பட்டு வருகிறது. எங்கள் மருத்துவமனையில், குழந்தையின்மைக்கான (IUI,IVF/ICSI) போன்ற அனைத்து சிகிச்சைகளும், இத்துறையில் தேர்ந்த மருத்துவரை கொண்டு அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அளிக்கிறோம். இதை தூத்துக்குடியில் மக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விழாவில் திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் முரளிதரன், திண்டுக்கல், அரசன் குரூப்ஸ் தலைவர் டி.உலகுடைய சிவராஜா, டாக்டர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங், அற்புதம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஆம்ஸ்ட்ராங், கதிரியக்க நிபுணர் மருத்துவ, ஆலோசகர் ஜாஸ்லின் ஜேம்ஸ், அற்புதம் மருத்துவமனை மேலாளர் எஸ்.ஜே.வி. ரூபன்சிங், நிர்வாகி ஜே.சாமுவேல் ஐசக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










