» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்
திங்கள் 3, மார்ச் 2025 4:30:30 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் உயிர் காக்கும் இயக்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜாய்சன் தலைமை வகித்தார் முகாமினை தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்
முகாமில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி அதிகாரி மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையின் பொருளாளர் விக்னேஷ் மற்றும் டிரஸ்டிகள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரத்த வங்கி செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமினை அறக்கட்டளையின் டிரஸ்டி அசோக் குமார் ஒருங்கிணைத்திருந்தார். இம்முகாமின் இறுதியில் 96 அலகுகள் இரத்ததானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 384 உயிர்கள் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










