» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நிர்வாக சபை தேர்தலை நடத்த கோரிக்கை!
திங்கள் 3, மார்ச் 2025 12:49:41 PM (IST)

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நிர்வாக சபை தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி நகர மஹல்லாக்களின் கூட்டமைப்பு சார்பாக மின்னல் அம்ஜித், காதர் மைதின், கொளது மைதின், ஷாஜகான் ஆகிய முன்னாள் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டாக மனு அளித்தனர். இது குறித்து, நிர்வாகி, சையத் இப்ராகிம் பாஷா கூறும்போது, சுமார் 300 கோடி சொத்து மதிப்புள்ள தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஜாமியா பள்ளிவாசல் பங்கிற்கு தமிழ்நாடு பங்கு வாரியத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால கமிட்டி 23.1.2025 தேதியில் காலாவதியாகி ஒரு மாதம் ஆகிறது. ஆகையால் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக அலுவலகத்திலும், கிரஸன்ட் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலத்திலும் தமிழ்நாடு வக்பு வாரியம் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு நடைபெறாமல் இருக்கும் நிர்வாக சபை தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










