» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காலாவதியான ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்: அஞ்சல்துறை ஏற்பாடு
திங்கள் 3, மார்ச் 2025 12:33:01 PM (IST)
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க, மார்ச் முதல் மே மாதம் வரை 3 மாதங்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ.), ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு (ஆர்.பி.எஸ்.ஐ.) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்காப்பீடுகளை எடுப்பவர்களில் சிலர் முறையாக பிரீமியம் கட்டத் தவறுகின்றனர். இதனால், காப்பீடுகள் காலாவதி ஆகி, அதன் பலன்களை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு காப்பீடு காலாவதியான காப்பீட்டுதாரர்களின் வசதிக்காக, அஞ்சல்துறை சார்பில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இதில், காப்பீட்டு பிரீமியத்திற்கான காலாவதிக் கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. இதன்படி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிப்பதற்கான பிரீமியத் தொகை ரூ.1 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.2,500 வரை வழங்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3,000 வழங்கப்படும்.
ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் தாமத கட்டணத்தில் 30 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3,500-ம் வழங்கப்படும். இந்த முகாம் தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறும். ஆதலால் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்து கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சி. முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










