» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம்: கனிமொழி எம்பி ஆய்வு

திங்கள் 3, மார்ச் 2025 11:47:49 AM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில்  ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகளை  கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.227.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய முனையம் கட்டுமானப் பணிகளை  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தலைமையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வல்லநாட்டில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்ட சிப்காட் பகுதியில், புதிதாக கட்டபட்டுவரும் ESIC மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா,  மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ராஜேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

அப்படினா ?Mar 4, 2025 - 04:07:21 PM | Posted IP 104.2*****

கனிமொழி எம்பி ஆய்வு ? அப்படினா ? விஞ்ஞானியா ? போங்கடா 2ஜி குற்றவாளி

StickerMar 4, 2025 - 02:18:16 PM | Posted IP 162.1*****

Sticker

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory