» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது: மாணவ, மாணவிகள் ஆர்வம்!

திங்கள் 3, மார்ச் 2025 11:31:33 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 19,496பேர் தேர்வினை எழுதுகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இத் தேர்வு இன்று தொடங்கி மார்ச் 25 வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் 8887 மாணவர்கள், 10609 மாணவிகள் என மொத்தம் 19,496 தேர்வர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வினை எழுதுகின்றனர். 

தூத்துக்குடியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களான, காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   இன்று (03.03.2025) பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது தெரிவித்ததாவது: 2024 - 2025 ஆம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 03.03.2025 முதல் 25.03.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 90 தேர்வு மையங்களில் 8887 மாணவர்கள், 10609 மாணவிகள் என மொத்தம் 19496 தேர்வர்கள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதவுள்ளனர். இன்று  (03.03.2025) நடைபெற்ற மொழித்தாள் தேர்வில் 18852 மாணவ / மாணவிகள்  தேர்வு எழுதினர்.   97 சதவீதம் மாணவர்கள் இன்று மொழித்தாள் தேர்வினை எழுதினர்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு 90 முதன்மைக் கண்காணிப்பாளர்கள்,  90 துறை அலுவலர்கள்,  1369  அறைக் கண்காணிப்பாளர்கள், 144 நிலையான படையினர்,  288 சொல்வதை எழுதுபவர்,  24 வழித்தட அலுவலர்கள், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 180 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 344 மாணவர்களும் 41 மாணவிகளும் ஆக மொத்தம் 385 பள்ளி மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 366 மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் காற்றோட்டமான தேர்வறைகள், தூய்மையான குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தரைதளத்தில் உள்ள தேர்வறைகளில் தேர்வெழுதவும் சொல்வதை எழுதுபவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி, காவலர் பாதுகாப்பு வசதி, தடையில்லா மின்சாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.


மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் தேர்வு எழுதியவர்கள் 98.2 % மும், தேர்வு எழுத வராதவர்கள் 1.8 % ஆகும். மாணவர்கள் தேர்வு சார்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், அச்சமின்றி தேர்வெழுத ஆலோசனைகள் பெறவும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory