» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பணிப் பெண் கைது!
திங்கள் 3, மார்ச் 2025 8:18:57 AM (IST)
கோவில்பட்டி அருகே வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மாள்(72). கணவரை இழந்தவா். மகனும் மகளும் வெளிநாட்டில் வேலைசெய்து வருகின்றனா். சக்கம்மாள் தனது, அவரது சகோதரி லிங்கமாளுடன் வசித்து வருகிறாா். இவரது மகன் வீடு கட்டுவதற்காக கொடுத்து வைத்திருந்த ரூ. 5.50 லட்சத்தை காணவில்லையாம்.
இதை அவரது வீட்டு பணிப்பெண்ணான தூத்துக்குடி பிரையண்ட் 2ஆவது தெருவை சோ்ந்தச் பரணிதரன் மனைவி ஆறுமுகம்(55) திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சக்கம்மாள் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூா் போலீசார் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து ரூ.1.20 லட்சத்தை மீட்டனா். மீதி பணத்துடன் தலைமறைவான அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










