» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி - டிரைவர் கைது!
ஞாயிறு 2, மார்ச் 2025 8:51:51 PM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இழுப்பையூரணியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் உமா மகேஷ்வரன் (33). இவரது மனைவி மனைவி ராணி. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. உமாமகேஷ்வரன் தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அருகிலுள்ள டீக்கடையில் கடந்த 2வாரங்களாக தங்கியிருந்து வேலைபார்த்து வந்துள்ளார்.
இன்று இரு சக்கர வாகனத்தில் துறைமுகம் சாலையில் பழைய காவல் நிலையம் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து டாரஸ் லாரி ஓட்டி வந்த விளாத்திகுளம் எட்டையாபுரம் ரோடு, நியூ ரத்னா கம்பவுண்டைச் சேர்ந்த ராஜாமணி முத்துமாரியப்பன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










