» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆபத்தான பாதாள சாக்கடை குழியால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 8:43:54 PM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அபாய நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்தின் வடபுறம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே பேருந்துகள் வரும் மெயின் ரோட்டில் நடுவில் பாதாள சாக்கடை குழி பழுதடைந்து உடைந்து உள்ளது. அதில் யாரோ கல்லை நட்டி சென்றுள்ளனர். இந்த குழி பேருந்து நிலையத்தில் இருந்து வெளிவரும் சர்வீஸ் ரோட்டையும், மேம்பாலத்தின் இருந்து வரும் சாலையையும் இணைக்கும் சாலையின் நடுவில் இருப்பதனால் வாகன ஓட்டிகள் கவனம் குறைவாக வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கல்லை நடாமல் இருந்தால் கூட பெரிய ஆபத்து நிகழாது. ஆனால் இந்த கல்லை பாதாள சாக்கடை குழியில் நட்டியிருப்பதால் கவனக்குறைவாக வரும் வாகன ஓட்டிகள் அதில் மோதி ஆபத்து நடைபெறும் சூழல் உள்ளது. தினமும் ஆயிரக்கனக்கான வாகனங்கள் கடக்கும் பிரதான சாலையாக இருப்பதனால் விபத்து ஏற்படும் முன்பே மாநகராட்சி நிர்வாகம் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










