» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலை விபத்தில் சமூக ஆர்வலர் உயிரிழப்பு!
ஞாயிறு 2, மார்ச் 2025 8:39:41 PM (IST)
உடன்குடி அருகே சாலை விபத்தில் சமூக ஆர்வலர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை சேர்ந்தவர் அசோக் சுப்பையா (42). இவர் பனைமரம் வளர்ப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனு கொடுத்து வந்தார். மக்கள் பிரச்சினைகளில் மனு கொடுத்து தீர்வு காண்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் குலசேகரப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது முத்துநகர் அருகே நடந்த சாலை விபத்தில் அசோக் சுப்பையா படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)











SeenivasagamMar 2, 2025 - 11:11:00 PM | Posted IP 172.7*****