» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாய் மொழியைகட்டாய பாடம் ஆக்குமா திமுக அரசு? தூத்துக்குடியில் சீமான பேட்டி

ஞாயிறு 2, மார்ச் 2025 5:07:23 PM (IST)



"மும்மொழிக் கொள்கையை காங்கிரஸ் ஏற்கிறதா? தாய் மொழியைகட்டாய பாடம் ஆக்குமா திமுக அரசு ? என  சீமான கேள்வி எழுப்பினார். 

தென்காசியில் நடைபெறும்  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார் அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது "அனைத்து கட்சி கூட்டம் என்பது ஆகாத கூட்டம். அதில் கலந்து கொள்ளும் கட்சிகளின் நிலைபாடு தான் என்ன? மும்மொழிக் கொள்கையை காங்கிரஸ் ஏற்கிறதா எதிர்கிறதா? தமிழகம் வரும் வடக்ககத்திய தொழிலாளர்களுக்கு சங்கம் வைத்து அரசியல் நடத்துகிறார்கள் கம்யூனிஸ்டுகள். 

தமிழை தங்கிலீஷ் ஆக்கியதே இந்த பெரியார் கூட்டம் கர்நாடகம்  போல்  தாய் மொழியைகட்டாய பாடம் ஆக்குமா இந்த திமுக அரசு. பதாகை ஏந்தி பாராளுமன்றம் முன் போராட்டம் நடத்தவா 40 எம்பிகளை அனுப்பி வைத்தோம். இலங்கை மீனவர் பிரச்சனையா நிதி தரவில்லையா. எதற்கும் போராட்டம் அதை என் தம்பிமார் இங்கேயே செய்வார்களே. நான் பாலியல் குற்றவாளி என்றால் புகார் கொடுத்தவர் யார் இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து

nishaMar 3, 2025 - 12:05:21 PM | Posted IP 104.2*****

olungeenam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory