» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் திரியும் நாய்கள், கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 11:35:32 AM (IST)

காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் தெரு நாய்கள், கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் - தெரு நாய்கள், தெருவில் திரியும் மாடுகள் காரணமாக, நகர மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை புகார்கள் - அரசின் பல்வேறு துறைகளிடம் கொடுத்தும், இதுவரை இதற்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை.
இவ்விசயத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காயல்பட்டினம் சீதக்காதில் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெகா நிர்வாகி ஹாபிழ் ஸாலிஹ் நெறிப்படுத்திட, இறைமறையில் இருந்து வசனங்களை முத்து ஷாஹுல் ஹாமீது ஓதினார். மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான திருத்துவராஜ் - இப்பிரசனையினால் தன்னை போன்ற மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மெகா அமைப்பின் நிர்வாகி ஹாமீத் ரிபாய், ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக பேசினார். விரைவில் நிரந்தர தீர்வு வழங்கவில்லை என்றால், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், நோன்பு பெருநாளை அடுத்து, நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மெகா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாபிழ் MM முஜாஹித் அலி உடைய நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பெண்கள் உட்பட பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










