» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஞாயிறு 2, மார்ச் 2025 10:10:25 AM (IST)

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவிழா காலங்களில் அம்மன் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து மீண்டும் 7.40 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










