» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் சஹர் உணவு வழங்கும் பணி துவங்கியது!

ஞாயிறு 2, மார்ச் 2025 9:30:44 AM (IST)



தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு இலவசமாக சஹர் உணவு வழங்கும் பணி துவங்கியது. 

ரமலான் மாதம் ஆரம்பமானதை தொடர்ந்து நோன்பு வைப்பதற்காக தொழில் நகரமான தூத்துக்குடிக்குயில் பல்வேறு பகுதிகளிலிருந்து  தொழிலாளர்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அதிகாலையில் உணவு கிடைப்பது மிகவும் சிரமத்துக்கு உள்ளானது.  இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் இலவசமாக சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தூத்துக்குடி பாதுஷா சஹர்  கமிட்டி சார்பில் இஸ்லாமியர்களுக்கு சஹர் உணவு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.‌ இதில் அதிகாலையில் தினமும் சுமார் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சஹர் உணவு  சாப்பிட்டு நோன்பு  கடைப்பிடித்து வருகின்றனர். தூத்துக்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வேலை காரணமாக இங்கு தங்கி இருப்பவர்களுக்கு சஹர் உணவு எந்த சிரமமும் இல்லாமல் கிடைப்பதற்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெகு சிறப்பாக வழங்கப்பட்டு வருவதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். 

ஏற்பாடுகளை தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் பாதுஷா சஹர் கமிட்டி தலைவர் மீராசா மரைக்காயர்,  செயலாளர் எம் எஸ் எப் ரகுமான்,  பொருளாளர் ராஸிக்,  துணைத் தலைவர் நவரங் சகாப்தின்,  துணைச் செயலாளர் முகமது உவைஸ்,  மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முகைதீன் மூஸா, , நியாஸ், ஆஷிக், முஹம்மது,செரீப், பாபு, இம்ரான், சேக், அன்சாரி, சம்சு, சைபுதீன் ஆட்டோ காஜா, ஹரீம், அரபி, வக்கீல் சுலைமான் , மற்றும் ஜாமியா பள்ளிவாசல் துணைத்தலைவர் சிராஜ், பொருளாளர் மூஸா ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory