» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது டிராக்டர் மோதல்: பேரூராட்சி தலைவர் மகன் உயிரிழப்பு - மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:17:53 AM (IST)
கோவில்பட்டி அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவரின் மகன் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் காமராஜ் நகரைச் சேர்ந்த அயன் சூரியராஜ் இவரது இளைய மகன் செல்வம் (28) மற்றும் இவரது நண்பரான விளாத்திகுளம் சாலையர் தெருவை சேர்ந்த குருசாமி மகன் ஸ்ரீராம் (33) ஆகிய இருவரும் கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து திரையரங்கில் சினிமா பார்த்துவிட்டு ஊர் திரும்பி உள்ளனர்.அப்போது கோவில்பட்டி - எட்டையாபுரம் சாலையில் இவர்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த டிராக்டர் பல்க்கில் டீசல் போடுவதற்காக திடீரென திரும்பிய போது டிரைலரில் இன்டிக் கேட்டர் ஏதும் இல்லாததால் டிராக்டரின் ட்ரெய்லர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இவரது நண்பர் ஸ்ரீராம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு செல்வத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










