» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறப்பு தொழுகை: இஸ்லாமியர்கள் திரளானோர் பங்கேற்பு!
ஞாயிறு 2, மார்ச் 2025 9:13:07 AM (IST)

தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. 2ம்தேதி துவங்கி அடுத்த மாதம் 31ம்தேதி வரை அதாவது 30நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு ரமலான் பிறை நேற்று தென்படாத காரணத்தால், இன்று காலை இஸ்லாமியர்கள் நோன்பு துவங்க உள்ளனர்.
இதற்காக தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர் அப்போது உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.
இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், இமாம் சதக்கத்துல்லா, தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா, செயலாளர் எம் எஸ் எப் ரகுமான், துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் இப்ராகிம் மூசா, கிராண்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய நலச் சங்க தலைவர் ஏ கே மைதீன், உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










