» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சீமானின் பேச்சை பெண்கள் எப்படி சகித்துக் கொள்கிறார்கள்- கனிமொழி கேள்வி!

சனி 1, மார்ச் 2025 8:26:01 PM (IST)

கேவலமாக பேசும் சீமானின் பேச்சை அவரது வீட்டில், கட்சியில் இருக்கும் பெண்கள், எப்படி சகித்துக்கொண்டு, இருக்கிறார்கள் என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார். 

சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரெயில்வே துறையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அமைச்சர் தீர்த்து, நாடு முழுவதும் ரெயில் விபத்துகள் ஏற்படாமல் கவனித்தால் நாட்டிற்கு மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும். மும்மொழிக்கொள்கையை திணிப்பது தி.மு.க.வோ, அதன் தலைவரோ அல்ல.

மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மாட்டோம் என்று அதிகாரத்தோடு சொல்லக்கூடியவர்கள் தான் இங்கே பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு என்றாலே ஒரு இளக்காரம், தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அதனால் அந்த மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுவதுதான் பிளவை ஏற்படுத்துமே தவிர உரிமைகளுக்காக பேசுவது, போராடுவது என்பது எந்த பிளவையும் ஏற்படுத்தாது. சமூகத்தை ஒருங்கிணைக்கும்.

சீமானின் வீட்டில் இருக்கும் பெண்கள், கட்சியில் இருக்கும் பெண்கள் கேட்க வேண்டும். இதைவிட கேவலமாக பேசுவதை பெண்களை எப்படி சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு அந்த வீட்டில் இருக்கிறார்கள், கட்சியில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.


மக்கள் கருத்து

ஆனந்த்Mar 2, 2025 - 08:47:12 AM | Posted IP 162.1*****

அவரது பேச்சு அப்படிதான் இருக்கும்

மக்கள்Mar 2, 2025 - 08:22:06 AM | Posted IP 162.1*****

திருமா , பாலு கூட இலங்கைல கொலைகாரன் ராஜபக்க்ஷே கூட தின்னுட்டு வந்து பேச்சை பாருங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory