» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும்: முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை
சனி 1, மார்ச் 2025 8:10:13 PM (IST)

பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவு மீன் நிறுவனங்களை மூடவும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறவும், அணுக்கழிவு பெருங்கிடங்குகளை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏவிடம் ஊர் சார்பாக அ.சண்முகம், ராதாகிருஷ்ணன், பா. பால்ராஜ் ஆகியோர் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள பொட்டலூரணி ஊரைச் சுற்றியுள்ள கழிவு மீன்களை மூலப்பொருளாக கொண்டு இயங்கும் மூன்று நிறுவனங்களை மூட வேண்டும்.
கழிவு மீனில் இருந்து மீன் தூள் போன்ற பொருட்கள் தயாரிப்பதாக கூறுகின்றனர். உற்பத்தி நடக்கும் நேரங்களில் மக்கள் வாழ முடியாத அளவிற்கு கொடிய நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் தூங்கவே முடியாது. நிலம், நீர் காற்று மாசுபடுகின்றனர். இது தொடர்பாக பலமுறை மணுக்கள் கொடுத்தும், ஜனநாயக வழி போராட்டங்களும் நடத்தப்பட்டது.
பின்பு நிறுவனத்தினை பின்புலமாக வைத்து தீண்டாமை வன்கொடுமை வழக்கு வரை பல பொய் வழக்குகள் பொதுமக்கள் மீது போடப்பட்டது. இவை மட்டுமின்றி பொட்டலூரணி விவசாய நிலப் பகுதியான பெருமாள் நாயக்கர் ஊரணிக்கு எதிர் புறமாக அணுக்கழிவுகளை கொட்டுவதற்காக ஒரு சதுர கிலோமீட்டர் அளவில் குளம் போன்று ஐந்து பெரும் கிடங்குகள் தோண்டப்பட்டுள்ளன. இந்தக் கிடங்குகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










