» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசு அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் : தூத்துக்குடியில் வேல்முருகன் பேட்டி!

சனி 1, மார்ச் 2025 4:30:37 PM (IST)



தமிழகத்தில் சுங்க சாவடிகளை அமைக்க மாட்டோம், ஜிஎஸ்டி வழங்க மாட்டோம், நீட் தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அதிரடியான முடிவு எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார். 

தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது "மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை ஒடுக்குவது என்பதும் ஜனநாயக மாண்புகளுக்கு முரணானது எதிரானது. தமிழக அரசு ஜிஎஸ்டி வரி வசூலை மத்திய அரசுக்கு வழங்க மாட்டோம். சுங்க சாவடிகளை தமிழகத்தில் அமைக்க மாட்டோம் மேலும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை இங்கே அனுமதிக்க மாட்டோம் என அதிரடியான முடிவு எடுக்க வேண்டும். 

மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவது, இனத்தின் பெயரால் மக்களை இன ஒதுக்கல் செய்வது என பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். இதற்கெல்லாம் மக்கள் புரட்சி செய்ய வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி, ஆங்கிலம் தொடர்பு மொழி. இங்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் என்ன? நாம் நமக்கு விரும்பிய மொழிகளை படிக்கலாம். விரும்பிய மொழியை நமது குழந்தைகளுக்கு படிக்க வைக்கிறோம். 

நாம் விரும்பிய மொழியை படிப்பது என்பது வேறு இந்தி படித்தால் தான் உங்களுக்கு நிதி இன்று இந்தியை திணிப்பது வேறு. சீமான் குறித்து பேச விரும்பவில்லை சட்டமன்றத்தில் எனது கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தமிழக முதல்வர் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து பாலியல் பலாத்கரங்களில் ஈடுபடுபவர்களை ஒருமுறை தவறு செய்தால் ஆயுள் தண்டனை அடுத்ததாக தவறு செய்தால் சாகும்வரை சிறை தொடர்ந்து தவறு செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்கள். 

இதற்கு அடியேனும் ஒரு காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுமி குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் எளிமையானவர் எளிய மக்களுடன் பழகக் கூடியவர் ஆனால் அவரது இந்த கருத்து ஏற்புடையது அல்ல. மேலும் பாலியல் சம்பவங்கள் தொடர்பாக தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கடுமையான சட்டங்கள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. பாலியல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

இந்திய நாட்டின் குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதே போன்று விஜயும் வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் பல தலைவர்கள் தாங்கள் தான் அடுத்த முதல்வர் என்று அறிவித்திருக்கிறார்கள். அதே போன்று விஜய் அறிவித்திருக்கிறார் அது அவர் உரிமை. பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படுவது என்பதை தமிழக முதல்வர் தான் முதலில் சுட்டிக்காட்டினார். 

ஆனால் அதற்கு பின்பு கோயம்புத்தூர் வந்த அமித்ஷா தமிழ்நாட்டில் உள்ள எம்பிகளின் எண்ணிக்கை குறையாது என்று ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அது தமிழ்நாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள சொன்னாரா? ஒரு நாடாளுமன்றம் கட்டும்போது 534 இருக்கைகள் இருக்க வேண்டும் அவர்கள் எத்தனை இருக்கைகளுடன் கட்டினார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்களுடைய அஜெண்டாவே நிறைவேற்றுவதற்கு எந்த பணிகளை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். 

ஏற்கனவே ஒன்றாக இருந்த காஷ்மீரை இரண்டு மாநிலங்களாக பிரிப்பதற்கு பதிலாக இரண்டு யூனியனாக பிரிக்கிறார்கள். அதுபோல பல மாநிலங்களாய் இன்று இரண்டாக பிரிப்பது இருக்கிற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை அப்படியே விலை பேசி கூண்டோடு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது நாடாளுமன்றத்தில் எதிராக பேசக்கூடிய எம்பிக்களை அவர்களை குற்றச்சாட்டுகள் உருவாக்கி அவர்களை கூனி கூறுக நிற்க வைப்பது அவர்கள் கையில் வருமானவரித்துறை உள்ளது. 

திமுக மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கட்டுப்படுத்துவேன் என அதிகாரத்துடன் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாது அதை கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

KootatchiMar 1, 2025 - 06:06:02 PM | Posted IP 172.7*****

Ivaruku Kootatchi endral enna endru theriyatha?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory