» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழுகுமலையில் இலவச இருதய பரிசோதணை முகாம்
சனி 1, மார்ச் 2025 3:36:50 PM (IST)

கழுகுமலையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இருதய பரிசோதணை முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து இருதய பரிசோதணை முகாம் கழுகுமலை தனியார் கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. முகாமிற்க்கு ரோட்டரி சங்கத் தலைவர் தாமோரக் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முகாமை ஜமீன் தேவர்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கம்மவார் சங்க முன்னாள் தலைவர் ராஜேந்திரன் , ரோட்டரி மாவட்ட அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட முதன்மை உதவி ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி நன்றியுரை கூறினார். முகாமில் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர் கலந்து கொண்டனர்.
காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சரவணன், பர்ஹானா ஆகியோர் பரிசோதனை செய்தனர். முகாமில் ரோட்டரி நிர்வாகிகள் ராஜேந்திரன், செந்தில்குமார், மாரியப்பன், சீனிவாசன், இளங்கோ, பூல்பாண்டி, பரமேஷ்வரன், முத்து செல்வன், கிருஷ்ணசாமி, ராஜ் குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி கர்ம வீரர் காமராஜ் ஊர்தி ஒருங்கிணைப்பாளர் சரண் ராஜ், காவேரி மருத்துவமனை மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










