» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெய்தல் எழுத்தாளர் அண்டோவுக்கு தமிழ்ச் செம்மல் விருது : அமைச்சர் மு.ப.சாமிநாதன் வழங்கினார்
சனி 1, மார்ச் 2025 3:21:20 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நெய்தல் எழுத்தாளர் யு. அண்டோ உட்பட 38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.ப.சாமிநாதன் வழங்கினார்.
சென்னை இராஜா அண்ணாமலைபுரம் தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2023ஆம் ஆண்டிற்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நெய்தல் எழுத்தாளர் நெய்தல் யு. அண்டோ உட்பட 38 பேருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ‘தமிழ்ச் செம்மல்’விருதுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்.விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் வரவேற்புரை ஆற்றினார். அரசு செயலாளர் வே. ராஜாராமன் தொடக்கவுரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் தே. ஜெயஜோதி நன்றியுரை ஆற்றினார்.
விருதாளர்கள் பட்டியல்
1. அரியலூர் மாவட்டம் புலவர் க.ஐயன்பெருமாள்
2. இராணிப்பேட்டை மாவட்டம் முனைவர் க.பன்னீர் செல்வம்
3. இராமநாதபுரம் மாவட்டம் நீ. சு. பெருமாள்
4. ஈரோடு மாவட்டம் து. சுப்ரமணியன்.
5. கடலூர் மாவட்டம் சி. ஆறுமுகம்
6. கரூர் மாவட்டம் முனைவர் க.கோபாலகிருஷ்ணன்
7. கள்ளக்குறிச்சி மாவட்டம் ச. பிச்சப்பிள்ளை
8. கன்னியாகுமரி மாவட்டம் முனைவர் வ. இராயப்பன்
9. காஞ்சிபுரம் மாவட்டம் முனைவர் த. ராஜீவ் காந்தி
10. கிருட்டினகிரி மாவட்டம் முனைவர் அ.திலகவதி
11. கோயம்புத்தூர் மாவட்டம் சு. தர்மன்
12. சிவகங்கை மாவட்டம் முனைவர் உ. கருப்பத்தேவன்
13. செங்கல்பட்டு மாவட்டம் புலவர் வ. சிவசங்கரன்
14. சென்னை மாவட்டம் இரா. பன்னிருகை வடிவேலன்
15. சேலம் மாவட்டம் சோ. வைரமணி (எ) கவிஞர் கோனூர் வைரமணி
16. தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவர் ந. ஜுனியர் சுந்தரேஷ்
17. தருமபுரி மாவட்டம் மா. சென்றாயன்
18. திண்டுக்கல் மாவட்டம் முனைவர் இர. கிருட்டிணமூர்த்தி
19. திருச்சிராப்பள்ளி மாவட்டம் இராச. இளங்கோவன்
20. திருநெல்வேலி மாவட்டம் அ. முருகன்
21. திருப்பத்தூர் மாவட்டம் புலவர் நா. வீரப்பன்
22. திருப்பூர் மாவட்டம் க.ப.கி. செல்வராஜ்
23. திருவண்ணாமலை மாவட்டம் முனைவர் ச.உமாதேவி
24. திருவள்ளூர் மாவட்டம் சு. ஏழுமலை
25. திருவாரூர் மாவட்டம் முனைவர் வி. இராமதாஸ்
26. தூத்துக்குடி மாவட்டம் நெய்தல் யூ. அண்டோ
27. தென்காசி மாவட்டம் செ. கண்ணன்
28. தேனி மாவட்டம் முனைவர் மு. செந்தில்குமார்
29. நாகப்பட்டினம் மாவட்டம் கவிஞர் நாகூர் மு. காதர் ஒலி
30. நாமக்கல் மாவட்டம் ப. கமலமணி
31. நீலகிரி மாவட்டம் புலவர். இர. நாகராஜ்
32. புதுக்கோட்டை மாவட்டம் இரா. இராமநாதன்
33. பெரம்பலூர் மாவட்டம் மு.சையத்அலி
34. மதுரை மாவட்டம் புலவர் இரா. செயபால் சண்முகம்
35. மயிலாடுதுறை மாவட்டம் க.இளங்கோவன் (எ) நன்னிலம் இளங்கோவன்
36. விருதுநகர் மாவட்டம் கா.காளியப்பன்
37. விழுப்புரம் மாவட்டம் இரா. முருகன்
38. வேலூர் மாவட்டம் இரா. சீனிவாசன்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










