» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவலர்களுக்கு மன அழுத்தம் நீக்கும் சிறப்பு பயிற்சி

சனி 1, மார்ச் 2025 8:42:22 AM (IST)



தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினருக்கு மன அழுத்தம் நீக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி நகரின் மிக பிரபல மனநல மருத்துவர் எஸ். சிவசைலம் கலந்து கொண்டு காவலர்களுக்கு சிறப்பு பயிற்சியளித்தார். அவர் கூறுகையில் காவலர்கள் தினந்தோறும் எண்ணற்ற மனஅழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தத்தை குறைத்து அவர்களை மேலும் திறம்பட பணியாற்ற மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, நேர்மறை எண்ணங்களை மேற்கொள்வது, தேவையான ஓய்வு எடுத்து கொள்வது போன்றவைகளை செய்வதால் பணித்திறன் மேம்படுவதுடன் காவலர்களின் மனநலன் காக்கப்படும் என்றார்.

தியானம், யோகாசனங்களை தொடர்ந்து செய்து வந்தால் மனஅழுத்தம் குறைந்து மனஅமைதி பெறுவதுடன் சகிப்புத்தன்மை, பொறுமை, பிரச்சனைகளை சீராக கையாளும் திறன், சரியான முடிவுகளை எடுக்கும் பண்புகள் போன்றவை வளரும் என்று கருத்தரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் மீகாராம் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory