» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லஞ்சம் வாங்கிய துணை பத்திரப்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 28, பிப்ரவரி 2025 9:36:38 PM (IST)
லஞ்சம் வாங்கிய வழக்கில் துணை பத்திரப்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி மேலத் தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி (47). விவசாயி. இவர் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தூத்துக்குடி மேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நில விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக பதிவு செய்ய சென்றுள்ளார். அங்கு தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி (74) என்பவர் துணை பதிவாளராக இருந்து வந்தார்.
அவரிடம் விற்பனை ஒப்பந்த பதிவு தொடர்பாக பேசிய போது அவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோதிமணி தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்கள் தெரிவித்த ஆலோசனையின் பேரில் ஜோதிமணி பத்திரப்பதிவு துறை துணை பதிவாளருக்கு லஞ்சம் கொடுக்க சென்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து சின்ன தம்பியை கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வக்கீல் ஜென்சி ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வசித்குமார் இன்று தீர்ப்பு வாசித்தார். அதில் முன்னாள் பத்திர பதிவுத்துறை துணை பதிவாளருக்கு சின்ன தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)

விளாத்திகுளத்தில் யோகிஸ்வரர் சமுதாய குடும்ப விழா
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:37:25 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)










